Monday, November 21, 2011

சிலேடை நயம் - தமிழின் அழகு!

1.கவி காளமேகம் – நகைச்சுவை பாடல்
நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்குஉணவு அருந்துவதற்காக கவிஞர் காளமேகபுலவர் ஒரு தடவை சென்றிருந்தார்.நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை.
பசியின் உச்சத்துக்குப் போன பின்னரே உணவு வந்தது .உண்ட பின்காளமேகம் கவிதை பாடினார்.“கத்துக்கடல் நாகைக்காத்தான் தன் சத்திரத்தில்அத்தமிக்கும்போதில்அரிசி வரும் – குத்திஉலையில் இட ஊர் அடங்கும்;ஓரகப்பை அன்னம்இலையில் இட வெள்ளி எழும்.”
பாடலைக் கேட்ட பின்னர்தான் உரிமையாளருக்கு, வந்திருப்பதுகாளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கேதனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தகாத்தான், காளமேகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
காளமேகம் நிலைமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தைஇவ்வாறு சொல்லிக் கொண்டார்.
”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில்உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டைமூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டுஅந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பைஅன்னம், வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்.”
-------------------------------------------------------------------------------------------------------2. ஏழையொருவன் அரசனைப் பாடிப் பொருள் பெற விரும்பினான். அதனால் இன்னொரு புலவனையணுகி விபரத்தைக் கூறி பாடல் பாடுவது எவ்வாறெனக் கேட்டான். புலவனோ அந்த ஏழைமீது எரிந்து விழுந்து எதையாவது கன்னா பின்னா என்று பாடெனக் கூறிவிட்டான். அறிவிலியான அந்த ஏழையும் அரசனைப்பார்க்கச் சென்றான். செல்கின்ற வழியில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து "காவிறையே" என்றான். இன்னும் சற்று அப்பால் சென்றபோது, குயில் கூவும் குரல் கேட்டது. அதைப்பார்த்துக் "கூவிறையே" என்றான். தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, சோழ மன்னனின் தகப்பனால் கட்டப்பட்ட கோயில் ஒன்றிலிருந்து எலியொன்று வெளியே ஓடியது. அதைக் கண்டதும் "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" என்று சொலிக்கொண்டு அரசவையை அடைந்தான். மன்னனையும் ஏனையோரையும் வணங்கி, தான் வந்த விபரத்தைக் கூறினான். மன்னரும் மகிழ்ந்து பாடலைக் கூறும்படி கேட்க அந்த ஏழை பின் வருமாறு பாடினான்."காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி " (இந்த இருவரிகளின் பின் எப்படி முடிப்பதென அறியாது, புலவன் சொல்லியது போல மிகுதியைப் பாடிவிட்டான்)"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."
பாடலைக் கேட்டு சபையேர் சிரிக்க அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனைச் சிரச்சேதத்திற்கு உத்தரவிட்டார். அவனது பரிதாப நிலை கண்டு சபையிலிருந்த கம்பர் அவன் சரியாகத்தான் பாடியுள்ளான் எனக் கூறி அதற்கு விளக்கம் சொன்னாராம்.
காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி "
"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."

காவிறையே "கா" என்றால் ஆகாயம். அங்கு இறைவனாக அரசனாக இருப்பவன் இந்திரன். "கூ" என்றால் பூமி. பூமிக்கு அதிபதியானவனே. உன் தந்தையானவர் "கோ" அரசன். அவர் இந்திரன் போன்று வில்வித்தையில் சிறந்த பெருமைமிக்க தேர்ச்சியுடையவர். "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" "கான்னா" கொடையிற் சிறந்தவன் (கர்ணன்) "பின்னா" கண்ணனுக்குப் பின் பிறந்தவன் "தர்மன்". இவ்வாறு கொடை வழங்குவதில் கர்ணணுக்கும் அறசெயல்களில் தர்மனுக்கும் இணையாணவர் எங்கள் சோழ மன்னன் என்று பாடலுக்குப் பொருள் கூறினார்.

சோழமன்னன் மகிழ்ந்து பரிசு வழங்கி சிறப்பித்தான்.



"பாம்பும்" "எள்ளும்" ஒன்றே தான் என்று கவி காளமேகம் பாடிய ஒரு சிலேடை. ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டைபற்றில் பரபரவெனும் பாரில்பிண்ணாக்கும் உண்டாம்உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.எள்ளு செக்கிலே கடையப்பட்டு (ஆடி) எண்ணெய்க்குடத்திலே சேரும். பாம்பும் படமெடுத்தாடியபின் பாம்பாட்டி கொண்டுவரும் குடத்தில் அடைந்துவிடும்.எள்ளு செக்கிலே கடையப்படும் போது இரைவதுபோன்ற சந்தம் எழுப்பும். பாம்பும் படமெடுத்தாடும்போது சினந்து சீறும்எண்ணெய் வைத்துள்ள குடத்தின் மூடியை திறந்தால் அங்கு பார்ப்பவரின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும். பாம்பு இருக்கும் குடத்தின் மூடியை திறந்தாலும் பாம்பு "எட்டி முகம் காட்டும்". எள்ளெண்ணெயை தலையில் (மண்டை) தேய்த்தால் அது பரபரவென தலையோட்டினுள் ஊடுருவி செல்லும். பாம்பின் தலையை பிடித்தால் அதுவும் பரபரவென சுற்றிக்கொள்ளும்.எள்ளில் இருந்து வருவது எள்ளுப் பிண்ணாக்கு. பாம்பின் நாக்கும் பிளவுபட்ட நாக்கு (பிண்ணாக்கு).

0 comments: