Monday, November 21, 2011

மன உளைச்சலைத் தவிர்க்க சில வழிமுறைகள்

மன உளைச்சலைத் தவிர்க்க சில வழிமுறைகள்

@ நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்.

@ அளவுக்கு அதிமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

@ முக்கிய வேலைகளை அடையாளம் கண்டு வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

@ முதலில் முடிக்க வேண்டிய வேலைகளை காலத்தோடு முதலில் செய்து முடிக்க நேர பராமரிப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

@ தினசரி நடவடிக்கையை நன்கு திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

@ அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் குறிக்கோளைத் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

@ பிரச்சினைகளைக் கண்டு ஓடாமல் அவற்றை எதிர்த்து நின்று தீர்வு காண முயல வேண்டும்.

@ மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கலை,விளையாட்டு,போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

@ வீட்டிலும் வெளியிலும் இதமான சூழ்நிலை தேவை.

@ கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ளுதல்

@ பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லலாம்.

@ நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். (வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்)

@ அதிக கவலையான சம்பவம் ஏதும் நிகழ்ந்தால் வாய்விட்டு அழுது முடித்தால் மனச்சுமை குறையும்.

@ உற்ற நல்ல நண்பர்களிடம் செய்திகைளப் பகிர்ந்துகொள்ளலாம். உரியவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

@ ஓய்வு, தியானம், கடவுள் வழிபாடு, இனிமையான இசை மனதிற்கு நல்லது.

@ மற்றவர்களுக்கு உதவி செய்தல், தொண்டு, சமூக சேவை மனதிற்கு நிம்மதி தரும்.

0 comments: